ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து பதிவான நிலநடுக்கம்!

Afghanistan Earthquake World
By Fathima Dec 19, 2025 10:16 AM GMT
Fathima

Fathima

ஆப்கானிஸ்தானில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

காலை 11.09 மணியளவில் (இலங்கை நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மீண்டும் நிலநடுக்கம் 

ஆப்கானிஸ்தானில் 40 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 36.26 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 69.19 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து பதிவான நிலநடுக்கம்! | Two Earthquakes In Afghanistan In One Day

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் மதியம் 12.04 மணியளவில் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகி உள்ளது.

ஒரே நாளில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நில அதிர்வால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.