கலைப் பீட மாணவர்களுக்கு இரண்டு பட்டங்கள்: வெளியான அறிவிப்பு
Ministry of Education
University of Colombo
Education
By Fathima
பல்கலைக்கழகங்களில் கலைப் பீடங்களில் சேரும் மாணவர்களுக்கு எதிர்வரும் வருடம் முதல் 02 பட்டங்கள் வழங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு
கலைப் பட்டப்படிப்புக்கு மேலதிகமாக தொழில்நுட்பம் மற்றும் கணனி விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பும் மாணவர்களுக்கு கிடைக்கும் என அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இதன் முலமாக கலைப் பீட மாணவர்களுக்கு இரண்டு பட்டங்களைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.