கோர கார் விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

Sri Lanka Police Badulla Colombo Accident Death
By Fathima Apr 14, 2024 12:08 PM GMT

கார் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து சம்பவம் இன்று (14.4.2024) ஹலி-ஏல ஸ்ரீ வீரசக்தி விநாயகர் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பொலிஸார் விசாரணை

புத்தாண்டை முன்னிட்டு இன்று காலை கொழும்பில் (Colombo) இருந்து பதுளை (Badulla) நோக்கி வந்த கார் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

கோர கார் விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு | Two Death In Road Accident In Colombo

51 மற்றும் 62 வயதுடைய இரண்டு பெண்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து சம்பவம் தொடர்பில் ஹலியாலா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.