கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சமர்:இருவர் பலி

Canada World Gun Shooting
By Laksi Jul 25, 2024 11:45 AM GMT

கனடாவில் (Canada) இரு தரப்புக்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சமரில் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவமானது ஸ்காப்ரோவின் மிட்லேண்ட் அவென்யூ பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ள பிளாசாவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பெரும் எண்ணிக்கையிலான துப்பாக்கி சூடுகள் நடத்தப்பட்டதாகவும் இரண்டு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்: வயிற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை

இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்: வயிற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை

வைத்தியசாலையில் அனுமதி

சம்பவத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சமர்:இருவர் பலி | Two Dead In Canada Scarborough Shooting

இதனையடுத்து, சம்பவ இடத்தில் ஒரு துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானம் : பலர் உயிரிழப்பு

நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானம் : பலர் உயிரிழப்பு

இலங்கையில் தங்கத்தின் விலையில் பதிவான மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் பதிவான மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW