மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கடல் சங்குகளுடன் இருவர் கைது
Sri Lanka Police
Puttalam
Sri Lanka Police Investigation
Crime
By Rakesh
புத்தளம் - கற்பிட்டிப் பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரத்து 200 கடல் சங்குகளை மீட்டுள்ளதாகக் கற்பிட்டிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கற்பிட்டி பொலிஸ் விசேட பணியகத்துக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் கற்பிட்டிப் பொலிஸ் பரிசோதகர் ஷான் முனசின்ஹ உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் இந்தச் சுற்றிவளைப்பை இன்று (21.06.2023) மேற்கொண்டுள்ளனர்.
பல்வேறு அளவிலான கடல் சங்குகள்
இந்நிலையில் பல்வேறு அளவிலான கடல் சங்குகள் 40 சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்டிருந்ததுடன், சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26 மற்றும் 28 வயதுடைய கற்பிட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.