புத்தளத்தில் சட்டவிரோத பொருட்களுடன் இருவர் கைது

Puttalam Sri Lanka Police Investigation Crime
By Laksi Nov 02, 2024 02:22 PM GMT

புத்தளத்தில் ஐஸ் போதைப்பொருள், வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் சட்டவிரோத மதுபானங்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கைது நடவடிக்கையானது நாகவில்லுவ பிரதேசத்தில் நேற்று (01) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகமும் இணைந்து புத்தளம், நாகவில்லுவ பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த பொருட்களுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அறுகம் குடா தாக்குதல் எச்சரிக்கை : ஆறுபேர் கைது

அறுகம் குடா தாக்குதல் எச்சரிக்கை : ஆறுபேர் கைது

மேலதிக விசாரணை

இதன்போது, ஐஸ் போதைப்பொருள் 8 கிராம் , 320 வெளிநாட்டு சிகரெட்டுகள், 440 லீற்றர் கோடா மற்றும் சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட ஸ்பிரிட் மற்றும் 100 லீற்றர் மதுபானம் என்பன அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

புத்தளத்தில் சட்டவிரோத பொருட்களுடன் இருவர் கைது | Two Arrested With Foreign Cigarettes In Puttalam

சம்பவத்தில் 28 மற்றும் 39 வயதுடைய பாலவி மற்றும் புத்தளம் பிரதேசத்தை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய துறைகளில் இந்தியாவின் ஆதரவை எதிர்பார்க்கும் ஜனாதிபதி

முக்கிய துறைகளில் இந்தியாவின் ஆதரவை எதிர்பார்க்கும் ஜனாதிபதி

அம்பாறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் பலி

அம்பாறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் பலி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW