ரஷ்ய - உக்ரைன் போர்முனைக்கு இலங்கையர்களை அனுப்பிய இருவர் கைது
ரஷ்ய(Russia) இராணுவத்திற்கு இலங்கையர்களை அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் உரிமையாளரும் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சிறப்பு புலனாய்வு பிரிவின் அதிகாரிகள், சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
சுற்றுலா விசாவில் ரஸ்யாவிற்கு அனுப்பப்பட்டு, ரஷ்யா இராணுவத்தின் சிவில் சேவையில் வேலை கொடுப்பதாக உறுதியளித்த பின்னர் ஒவ்வொருவரிடம் இருந்தும் 1.5 மில்லியன் ரூபாய்களை குறித்த நிறுவனம் பெற்றுள்ளது.
ரஷ்ய - உக்ரைன் போர்முனை
எனினும் இலங்கையர்கள் ஏமாற்றப்பட்டு, சிவில் சேவைக்கு பதிலாக ரஷ்ய - உக்ரைன் போர்முனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நிறுவனத்தின் இந்த மோசடி தொடர்பாக 07 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதன்படி மொத்தம் 10 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான தொகையை நிறுவனம் பெற்றுள்ளதாது.
மேலும், நுகேகொடை - ஸ்டான்லி திலகரத்ன மாவத்தையில் இந்த நிறுவனம் செயற்பட்டு வந்துள்ளது.
சம்பந்தப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமம் ஏற்கனவே இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர்கள் இருவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படுகின்றனர்.