போலியான அழகுசாதனப் பொருட்கள் விற்பனை : இருவர் கைது

Kandy Sri Lanka Beauty
By Shalini Balachandran Jul 12, 2024 03:05 AM GMT

போலியான அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்து காட்சிப்படுத்திய இரண்டு சந்தேகநபர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது கண்டி தலதா வீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர்கள்

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 42 மற்றும் 60 வயதுடைய மடவளை மற்றும் கண்டி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

போலியான அழகுசாதனப் பொருட்கள் விற்பனை : இருவர் கைது | Two Arrested For Selling Fake Cosmetics

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW