மருதமுனை சுனாமி குடியேற்ற பிரதேச உள்ளக வீதிகள் புனரமைப்பு
மருதமுனையிலுள்ள(Maruthamunai) சுனாமி குடியேற்ற பிரதேச உள்ளக வீதிகளில் புனரமைப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் டி-100 திட்டத்தின் கீழ், சுமார் ஒரு கோடி 50 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியானது கடந்த சுனாமி பேரலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்ட மருதமுனை பிரான்ஸ் சிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள உள்ளக வீதிகள் ஆகும்.
மக்கள் கோரிக்கை
இது மக்கள் பாவனைக்கு பொருத்தமற்றதாக குண்டும், குழியுமாக இருந்ததை தொடர்ந்து இவ்வாறு புனரமைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மருதமுனை 65 மீட்டர் சுனாமி வீட்டுத் திட்டத்தின் மேட்டுவட்டை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள மையவாடி வீதி பாவனைக்கு பொருத்தமற்றதாக காணப்படுவதாக மக்களால் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து அவ்வீதியும் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும், குறித்த அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட்டு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்டத்தரணி ஹரீஸ் தனது இணைப்பாளர்கள் சகிதம் கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





