மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசலில் சுனாமி நினைவு தின துஆ பிரார்த்தனை

Tsunami Ampara Eastern Province
By Laksi Dec 26, 2024 04:04 AM GMT
Laksi

Laksi

கடந்த 2004 ஆம் உலகை தாக்கிய சுனாமி பேரலையின் 20 ஆவது ஆண்டு நினைவு தின துஆ பிராத்தனையும் குர்ஆன் தமாம் செய்யும் நிகழ்வும் மாளிகைக்காடு அந்-நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்று (26) காலை பள்ளிவாசலின் பதில் தலைவர் ஏ.எம். ஜாஹீரின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

அம்பாறையில் கடலில் நீராட சென்ற மூவர் மாயம்

அம்பாறையில் கடலில் நீராட சென்ற மூவர் மாயம்

துஆ பிரார்த்தனை

இதன்போது, சுனாமியால் உயிர் நீத்த உறவுகளுக்கான துஆ பிரார்த்தனையை மாளிகைக்காடு அந்-நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் பேஸ் இமாம் மௌலவி ஏ.எல்.எம். மின்ஹாஜ் (உஸ்மானி) நிகழ்த்தினார்.

மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசலில் சுனாமி நினைவு தின துஆ பிரார்த்தனை | Tsunami Remembrance Day At Maligaikadu Mosque

இந்நிகழ்வில் உலமாக்கள், மாளிகைக்காடு கிராம நிலதாரி ஏ.எம். நஜீம், மாளிகைக்காடு அந்-நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், பொருளாளர் எம்.எப்.எம். றிபாஸ், ஆலோசகர் ஐ. இஸ்திகார் உட்பட நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு

சுனாமி அனர்த்தத்தின் 20ஆம் ஆண்டின் நினைவு : இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

சுனாமி அனர்த்தத்தின் 20ஆம் ஆண்டின் நினைவு : இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGallery