ஜனாதிபதி அநுரவின் தமிழ் அறிக்கை பற்றிய உண்மை

Anura Kumara Dissanayaka Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples President of Sri lanka
By Rakshana MA Nov 18, 2024 08:38 AM GMT
Rakshana MA

Rakshana MA

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) வெளியிடப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் அறிக்கை போலியானது என தெரிவிக்கப்படுகிறது.

போரின் போது உயிர் நீர்த்தவர்களை நினைவு கூறுவது தொடர்பில் இந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த காலங்களில் போரின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதில் தமிழ் சமூகம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இஸ்ரேலின் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் ஊடக தலைவர் மரணம்

இஸ்ரேலின் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் ஊடக தலைவர் மரணம்

போலி அறிக்கை

எனினும் இந்த ஆண்டு முதல் அவ்வாறு எவ்வித தொந்தரவுகளும் இன்றி நினைவு கூர சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ஜனாதிபதியால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் போலி ஆவணம்

இந்த அறிக்கை தொடர்பில் அரசாங்கம் சார்பில் எவ்வித அதிகாரபூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை. குறித்த அறிக்கை போலியானது என மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் ஊடகத் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

இந்த போலி அறிக்கை தொடர்பில் தேசிய ஊடகங்கள் எவையும் தகவல் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இராணுவ முகாமில் ஒரு வகை காய்ச்சல் பரவல்: தனிமைப்படுத்தப்பட்ட வீரர்கள்

இராணுவ முகாமில் ஒரு வகை காய்ச்சல் பரவல்: தனிமைப்படுத்தப்பட்ட வீரர்கள்

சர்வதேச நாணய நிதியம் மற்றும் மத்திய வங்கி: முக்கிய உரையாடல்

சர்வதேச நாணய நிதியம் மற்றும் மத்திய வங்கி: முக்கிய உரையாடல்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


Gallery