இஸ்ரேலின் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் ஊடக தலைவர் மரணம்

Israel Lebanon Israel-Hamas War
By Rakshana MA Nov 18, 2024 06:34 AM GMT
Rakshana MA

Rakshana MA

இஸ்ரேல் (Israel) நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் உயர்மட்ட செய்தித் தொடர்பாளர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லெபனான் (Lebanon)தலைநகர் பெய்ரூட்டின் மத்திய பகுதியில் உள்ள கட்டிடத்தின் மீது நேற்று (17) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலே கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், இரண்டு லெபனான் பாதுகாப்பு வட்டாரங்கள் ரொய்ட்டர்ஸிடம், ஹிஸ்புல்லாவின் ஊடக தலைவர் முகமது அஃபிஃப் (Mohammed Afif) ராஸ் அல்-நபாவின் சுற்றுப்புறத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் தெரிவித்துள்ளன.

இராணுவ முகாமில் ஒரு வகை காய்ச்சல் பரவல்: தனிமைப்படுத்தப்பட்ட வீரர்கள்

இராணுவ முகாமில் ஒரு வகை காய்ச்சல் பரவல்: தனிமைப்படுத்தப்பட்ட வீரர்கள்

உறுதிப்படுத்தியுள்ள ஹமாஸ்

அத்துடன் அவர் கொல்லப்பட்டதை தன்னை இனம்காட்டாத ஒரு ஹிஸ்புல்லா அதிகாரி, அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் உறுதிப்படுத்தினார்.

Hezbollah

இருப்பினும் இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை உடனடியாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை. 

சர்வதேச நாணய நிதியம் மற்றும் மத்திய வங்கி: முக்கிய உரையாடல்

சர்வதேச நாணய நிதியம் மற்றும் மத்திய வங்கி: முக்கிய உரையாடல்

அழிக்கப்பட்ட கட்டளை மையம்

தாஹியேவில் (Dahiyeh) ஹிஸ்புல்லா இலக்குகளுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களை முடித்துவிட்டதாக இஸ்ரேல் படைத்துறை கூறியது.

Command center breached in Israeli attack

போர் விமானங்களால் தாக்கப்பட்ட இலக்குகளில் கட்டளை அறைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் அடங்கும் என்று இராணுவம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போட்டியாளர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர செய்தி!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போட்டியாளர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர செய்தி!

அரிசி இறக்குமதிக்கு அரசு நடவடிக்கை: புதிய கோரிக்கை!

அரிசி இறக்குமதிக்கு அரசு நடவடிக்கை: புதிய கோரிக்கை!

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW