ஈரானிய தலைவர் போர் நிறுத்தம் கோரியுள்ளார் : ட்ரம்ப்
ஈரானின் புதிய ஆட்சிமுறை ஜனாதிபதி அமெரிக்காவிடம் போர்நிறுத்தம் கோரியுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர் தனது, ட்ரூத் சமூக வலைத்தளத்திலேயே இந்த விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். இன்று இரவு அமெரிக்க ஜனாதிபதி அந்நாட்டு மக்களிடையே ஆற்றவுள்ள உரைக்கு முன்னதாக குறித்த விடயத்தை பகிர்ந்துள்ளார்.

ட்ரம்ப் இது குறித்து மேலும் குறிப்பிடுகையில், ஈரானிய புதிய தலைவர்,தனக்கு முன்னிருந்தவர்களை விட மிகக் குறைந்த தீவிரப்போக்குடையவர் எனவும், அதிக புத்திசாலி என்று வர்ணித்துள்ளார்.
இருப்பினும் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டு, தடையற்ற மற்றும் தெளிவான நிலை ஏற்படும் பட்சத்தில் இது குறித்துப் பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளதுடன், அதுவரை, நாம் ஈரானை அடியோடு அழிப்போம் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.