இலங்கை ஆடைத் தொழில்துறைக்கு ஏற்பட்டுள்ள பாரிய சவால்
ஆடைத் தொழில்துறையானது தற்போது இலங்கையில் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதித்துறையான இது, 9 சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
புதிய வரிகள், ஏற்றுமதி தடைகள், அதிக செலவுகள் மற்றும் அரசியல் கொந்தளிப்பு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆடை ஏற்றுமதி
அமெரிக்க ஜனாதிபதியால் விதிக்கப்பட்ட 44 சதவீத வரி காரணமாக இங்கு கடுமையான அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கட்டண உயர்வு இலங்கையின் 1.9 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஆடை ஏற்றுமதியை கடுமையாக பாதித்துள்ளது.
மேலும், 69 சதவீத பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் தொழில்துறைக்கு இது பெரும் சவாலாக அமைந்துள்ளது.
இந்நிலையில், GSP+ இழப்பு, ஐரோப்பிய ஒன்றிய சந்தையில் போட்டித்தன்மை இழப்பு, மற்றும் அதிகரித்த ஏற்றுமதி விலைகள் காரணமாக கேள்விகள் குறைந்துள்ளமையினால் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யும் தொழில்களுக்கு மேலும் தடைகளாக உள்ளன.
வேலைவாய்ப்புக்கள்
அத்துடன் 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து 20 சதவீதமாக சரிசெய்யப்படும் புதிய வரி அதிகரிப்புகள் (VAT & PAYE) உள் செலவு, உற்பத்தி செலவுகளை அதிகரிக்கும், மேலும் ஏற்றுமதி விலைகளை இனி போட்டித்தன்மையற்றதாக மாற்றும்.
இது தொழில்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.
300,000 வேலைகளை இழக்கும் அபாயமும் ஒரு பெரிய பொதுப் பிரச்சினையாக மாறியுள்ளது.
இது முக்கியமாக கிராமங்களில் வசிக்கும் பெண் ஊழியர்களையும் உழைக்கும் மக்களையும் பாதிப்பதாக துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |