அநுரவுக்கு மீண்டும் ட்ரம்பிடமிருந்து வந்த கடிதம்

Anura Kumara Dissanayaka Trump tariff
By Rakshana MA Jul 10, 2025 08:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பிய உத்தியோகபூர்வ கடிதத்தை திருத்தியபின் மீண்டும் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக ஜனாதிபதியின் பெயர் தவறாக “அருண” என எழுதியிருந்ததைமையால் இக் கடிதம் மறுபரிசீலனை செய்யப்பட்டது.

இது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு பாரிய சர்ச்சை உருவாக்கும் நிலையில், சென்றுள்ளதன் பின்னணியில், உடன் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செம்மணியில் கொடூரமாக புதைக்கப்பட்ட மக்கள்! அரசு நீதியாக செயற்படவில்லை

செம்மணியில் கொடூரமாக புதைக்கப்பட்ட மக்கள்! அரசு நீதியாக செயற்படவில்லை


2025 ஜூலை 9ஆம் திகதி குறிக்கப்பட்டுள்ள திருத்தப்பட்ட கடிதத்தில், இலங்கை ஏற்றுமதிகளின் மீது ஓகஸ்ட் 1 முதல் 30% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த அமெரிக்காவின் இந்த வரி விதிப்பானது, இலங்கை விதித்து வரும் தொடர்ச்சியான வரி மற்றும் வரியற்ற தடைகள் காரணமாக ஏற்பட்ட வர்த்தக சமநிலையின்மையை சுட்டிக்காட்டுவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அநுரவுக்கு மீண்டும் ட்ரம்பிடமிருந்து வந்த கடிதம் | Trump S Letter To Anura Corrected

இதேவேளை, தனது கடிதத்தை “மிக பெரிய மரியாதை” எனச் சுட்டிக்காட்டிய ட்ரம்ப், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்த தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“அமெரிக்காவின் பொருளாதாரத்தில்” பங்கேற்க இலங்கை வரவேற்கப்படுவதாகவும், அது தனது வர்த்தகத் தடைகளை நீக்குமாயின், விதிக்கப்படும் வரிகளை மீளாய்வு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

“நீங்கள் அமெரிக்காவுடன் நீண்டகாலம் வர்த்தகக் கூட்டாளியாக இணைந்து செயல்படுவீர்கள் என நாங்கள் எதிர்பார்கிறோம், என்றும் “அமெரிக்கா உங்கள் நம்பிக்கையை ஏமாற்றுவதில்லை,” என கடிதத்தின் முடிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை சமூக சேவைகள் திணைக்கள முன்னேற்ற மீளாய்வு

திருகோணமலை சமூக சேவைகள் திணைக்கள முன்னேற்ற மீளாய்வு

ஈஸ்டர் தாக்குதலுக்கு நிதியளித்த ஜே.வி.பியின் முக்கிய உறுப்பினர்!

ஈஸ்டர் தாக்குதலுக்கு நிதியளித்த ஜே.வி.பியின் முக்கிய உறுப்பினர்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW