துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய ட்ரம்ப் : கவலை வெளியிட்ட சர்வதேச தலைவர்கள்

Donald Trump United States of America World
By Rukshy Jul 14, 2024 03:39 AM GMT
Rukshy

Rukshy

பென்சில்வேனியாவில் டொனால்ட் ட்ரம்பின் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது எக்ஸ் தளத்தில் கவலை தெரிவித்துள்ளார்.

இதேவேளை ட்ரம்ப் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் இருக்கிறார் என்பதை அறிந்த பின்னர் மகிழ்ச்சியாக இருந்தது எனவும் தகவலுக்காக நாங்கள் காத்திருக்கும்போது, ​​அவருக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும், பேரணியில் இருந்த அனைவருக்காகவும் நான் பிரார்த்தனை செய்தேன் என்றும் கூறியுள்ளார்.


துப்பாக்கிப் பிரயோகம் 

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் மீதான வெளிப்படையான தாக்குதலால் நானும் சாராவும் அதிர்ச்சியடைந்தோம். அவர் பாதுகாப்பாகவும், விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

எனினும், ட்ரம்ப் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு காதடியில் பட்டதும் டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றிக் கொண்டு நின்ற இடத்திலேயே அமர்ந்துவிட்டார்.

துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய ட்ரம்ப் : கவலை வெளியிட்ட சர்வதேச தலைவர்கள் | Trump Attack Shooting

அதன்பின்னர் அவருடைய பாதுகாவலர்கள் ட்ரம்ப்பை பாதுகாப்பாக அழைத்து சென்றுள்ளதோடு அவருடைய உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், துப்பாக்கிதாரி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு பொதுமக்களும் காயமடைந்துள்ளதுடன் ட்ரம்ப் உரையாற்றிய மேடைக்கு எதிரே இருந்த கட்டடத்தின் கூரையில் இருந்தே ஒருவர் ட்ரம்பை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை துப்பாக்கிப் பிரயோகம் செய்தவர் அடையாளம் காணப்பட்டு, உடனடியாகவே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW