அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக ட்ரம்ப் : வெளியான அறிவிப்பு

Donald Trump United States of America Election Gun Shooting
By Shalini Balachandran Jul 16, 2024 07:57 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் போட்டியிடுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.

 இதேவேளை ட்ரம்ப்பின் எதிரியாக அறியப்பட்ட ஓஹியோவைச் சேர்ந்த செனட்டரான ஜே.டி.வான்ஸ் என்பவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்

39 வயதான வான்ஸ், நேற்று (15) நடைபெற்ற குடியரசுக் கட்சியின் பிரதிநிதிகள் மாநாட்டில் அந்தப் பதவிக்கு பொருத்தமானவர் என்று கட்சிப் பிரதிநிதிகளின் ஒப்புதலைப் பெற்றுள்ளார்.

டிரம்ப் தனது சமூக ஊடக கணக்கில் ஒரு பதிவில், நீண்ட கால ஆலோசனைக்குப் பிறகு வான்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக ட்ரம்ப் : வெளியான அறிவிப்பு | Trump As Us Presidential Candidate

பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காதில் காயம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே ட்ரம்ப்பை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த குடியரசு கட்சி அனுமதி அளித்துள்ளது.  

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW