முஸ்லிம் மாணவிகளின் வெளியிடப்படாத பெறுபேறுகள்: கிடைக்கப்பெற்ற தீர்வு
திருகோணமலை (Trincomalee) ஸாஹிரா பாடசாலை மாணவிகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களுடைய பெறுபேறுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் (Senthil Thondaman) தலையீட்டிலேயே இந்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில், குறித்த மாணவர்கள் பரீட்சை எழுதும் போது, அவர்களின் ஆடை காதுகளை மறைத்திருந்ததாக கூறப்பட்ட காரணத்தினால் 70இற்கும் மேற்பட்ட திருகோணமலை ஸாஹிரா பாடசாலை மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகளை அரசாங்க அதிகாரிகள் தடுத்து வைத்திருந்தனர்.
கிழக்கு மாகாண ஆளுநர்
இந்த விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் குறித்த மாணவர்கள் கடந்த மாதம் முறைப்பாடு செய்தனர்.
உரிய நடவடிக்கை மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான், அவர்களுடைய பிரச்சினைகள் குறித்து பரீட்சைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டு அவர்களுடைய பெறுபேறுகளை வெளியிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
அதனடிப்படையில் அவர்களுடைய பெறுபேறுகள் கல்வி அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |