திருகோணமலையில் யானை தாக்கியதில் ஒருவர் பலி!

Sri Lankan Peoples Eastern Province Sri Lanka Elephants
By Rakshana MA Jul 24, 2025 04:30 AM GMT
Rakshana MA

Rakshana MA

திருகோணமலை (Trincomalee) சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுமேதங்கபுர எனும் பகுதியில் வைத்து யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் மூதூர் - மல்லிகைத்தீவச் சேர்ந்த 47 வயதுடைய உயிரிழந்துள்ளதுடன், தோப்பூர் நாராயணபுரத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் காயமடைந்துள்ளார்.

தனியார் துறையினருக்கான மாத சம்பளம்: வெளியான தகவல்

தனியார் துறையினருக்கான மாத சம்பளம்: வெளியான தகவல்

யானை தாக்ககுதல் 

சேருநுவர பொலிஸ் பிரிவில் உள்ள மாங்குளம் என்ற பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டுவிட்டு தங்களுடைய வீட்டுக்கு திரும்புகையிலேயே யானை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலையில் யானை தாக்கியதில் ஒருவர் பலி! | Trincomalee Elephant Attack Incident

உயிரிழந்தவரின் சடலம் சேருவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், படுகாயமடைந்தவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   

முத்துநகர் காணி பிரச்சினை தொடர்பில் எதிர் கட்சி தலைவர் வெளியிட்ட கருத்து

முத்துநகர் காணி பிரச்சினை தொடர்பில் எதிர் கட்சி தலைவர் வெளியிட்ட கருத்து

மட்டக்களப்பில் குரங்கு கடிக்கு இலக்காகிய 6 பெண்கள் படுகாயம்!

மட்டக்களப்பில் குரங்கு கடிக்கு இலக்காகிய 6 பெண்கள் படுகாயம்!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW