திருகோணமலையில் இரு வாகனங்கள் மோதி விபத்து

Trincomalee Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Aug 13, 2025 09:02 AM GMT
Rakshana MA

Rakshana MA

திருகோணமலை (Trincomalee) நிறுத்தி வைக்கப்பட்ட நெல் ஏற்றும் சிறிய ரக கெண்டருடன் சீமெந்து ஏற்றும் பார ஊர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (13) அதிகாலை 12.30 மணியளவில் ஈச்சிலம்பற்று காவல் பிரிவிலுள்ள பூமரத்தடிச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றுவதற்காக வந்த பார ஊர்தியானது ஈச்சிலம்பற்று - பூமரத்தடிச்சேனை பகுதியிலுள்ள வீதியில் நெல் ஏற்ற நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ஹெண்டர் வாகனத்தில் நேருக்குநேர் மோதியுள்ளது.

மகிந்தவை குறிவைத்து தாக்கும் அரசாங்கம்: பகிரங்கமாக கூறிய திலித் ஜயவீர

மகிந்தவை குறிவைத்து தாக்கும் அரசாங்கம்: பகிரங்கமாக கூறிய திலித் ஜயவீர


இந்த நேரத்தில் நெல் ஏற்றும் வாகனத்தில் யாரும் இல்லாததால் எவருக்கும் ஆபத்துக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் இரு வாகனங்கள் மோதி விபத்து | Trincomalee Cement Truck Accident

சீமெந்து பார ஊர்தி வாகனச் சாரதியின் தூக்க களக்கமே இவ்விபத்துக்கான காரணமென ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   

சிறையிலிருந்து கொண்டு போதைப்பொருள் வியாபாரம்: அதிரடி நடவடிக்கை எடுத்த பொலிஸார்

சிறையிலிருந்து கொண்டு போதைப்பொருள் வியாபாரம்: அதிரடி நடவடிக்கை எடுத்த பொலிஸார்

இன்று நாட்டில் பல இடங்களில் மழை

இன்று நாட்டில் பல இடங்களில் மழை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW