திருகோணமலையில் வான் விபத்தில் ஒருவர் பலி
Sri Lanka Police
Trincomalee
Accident
By H. A. Roshan
Courtesy: H A Roshan
கொழும்பில் இருந்து கிண்ணியா நோக்கி பயணித்த வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்றையதினம்(01.02.2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கிண்ணியா நோக்கி பயணித்த வான் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி குறித்த வானின் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
மேலதிக விசாரணைகள்
இந்நிலையில், விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.