திருகோணமலையில் பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக போராட்டம்
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக திருகோணமலையில் (Trincomalee) கையெழுத்திடும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்றைய தினம் (14) திருகோணமலை பேருந்து தரிப்பு நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றுள்ளது.
கையெழுத்து போராட்டம்
இன்னுமொரு அடக்குமுறை சட்டம் வேண்டாம், பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய், காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் இப்போதாவது நீதி வழங்கு, அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்யும் புதிய அரசியலமைப்புக்காய் போராடுவோம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து எதிர்புப் பதாகையில் கையெழுத்திடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் இக்கையெழுத்து போராட்டத்தில் அதிகளவான பொதுமக்கள் ஆர்வத்துடன் கையெழுத்துக்களை இட்டதையும் காணமுடிந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
