முத்துநகர் கப்பல் துறை காணி சர்ச்சை: அப்துல்லா மஹ்ரூப் குற்றச்சாட்டு
திருகோணமலை - முத்துநகர் கப்பல் துறை பிரதேசங்களில் எமது சிறுபான்மை சமூகத்தின் குடியேற்றத்தை அத்துமீறிய குடியேற்றங்களாக காட்டுவதற்கு முனைகிறார்கள் என முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் (Abdullah Mahroof) தெரிவித்தார்.
கிண்ணியாவில் நேற்று (02) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், 1973 ம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் அரசியல் அதிகாரியாக இருந்த முன்னால் பிரதியமைச்சர் ஏ.எல்.அப்துல் மஜீத் அதிகமாக காணி இல்லாதவர்களுக்கு வீடும், ஒரு கிணரும் என்ற அடிப்படையில் அவருடைய மாவட்ட அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி நான்கு வருடங்களாக 1977 வரை உட்கட்டமைப்பு வீதிகள், வீடுகள் போன்றவற்றை வழங்கி இற்றுடன் 55 வருடங்களாகி விட்டது.
காணிகள் விடுவிப்பு
நான் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக இருந்த போது 2019ம் ஆண்டு இறுதி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமாக முத்து நகர் தொடக்கம் கப்பல் துறை வரையான காணிகள் விடுவிக்கப்பட்டுவிட்டது.
உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்ட அந்த காணிகளை இப்போது தங்களுடைய ஆதரவாளர்களுக்கு அவர்கள் சார்ந்ணவர்களுக்கு ஐம்பது ஏக்கர், நூறு ஏக்கர் என விவசாயம் செய்கின்ற காணிகளை கொடுக்க முயலுகிறார்கள்.
இது சட்ட விரோதமானது எனக்கு முன்னர் துறைமுக கப்பல் துறை அமைச்சராக இருந்த மஹிந்த சமரசிங்க மற்றும் அர்ஜூன ரணதுங்கவும் விடுவித்து நிறைவேற்றிய தீர்மானத்தை ஒருங்கிணைப்பு குழு தலைவர் கவனத்திற்கொள்ளவில்லை என்பது தான் உண்மையான விடயம்.
நடவடிக்கைகள்
அதற்கான ஆதாரங்கள் கடைசியாக இருந்த முன்னால் அரசாங்க அதிபர் புஷ்பகுமாரவிடம் இருந்து பெற்று ஆவணங்கள் உள்ளது.
இவ்விடயத்தை கவனம் எடுத்து 57 வருடங்களாக விவசாய குடியிருப்பு காணிகளை அபகரிக்க அரசாங்கம் எடுக்க முனைந்தால் அல்லது அதிகாரமுடையவர்கள் இராணுவ பொலிஸார்களை பலவந்தமாக பாவித்து பெண்களை ஆண்களை தாக்க முனைவது பாரியதொரு குற்றச்செயலாகும்.
இதற்கு சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் முனைகின்றோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |