மட்டக்களப்பில் மீட்கப்பட்ட T56 ரக துப்பாக்கி
மட்டக்களப்பு (Batticaloa) மாநகரசபை எல்லைக்குட்பட்ட கட்டுமான தளமொன்றில் புதைக்கப்பட்டிருந்த T56 ரக துப்பாக்கி ஒன்று, அதற்கான ரவைகளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பொருட்கள் நேற்று இரவு (01) மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரி பிரியந்த பண்டார உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், இந்த துப்பாக்கியானது, லயன்ஸ் கிளப் வீதியில் புதிய வீடு கட்டப்பட்டு வந்த ஒரு காணியில் இரவு 10 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதைக்கப்பட்டிருந்த துப்பாக்கி
குறித்த துப்பாக்கி மீட்பு தொடர்பில் தெரியவருவதாவது, குளியலறை குழியை தோண்டும் போது, பணியாளர்கள் மண்ணுக்குள் பொலித்தீன் பையில் சுற்றப்பட்டிருந்த ஒரு பொதியை கண்டெடுத்துள்ளனர்.
அதில் துப்பாக்கி இருப்பதை அவதானித்த அவர்கள் உடனடியாக விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர், அங்கு புதைக்கப்பட்டிருந்த T56 ரக துப்பாக்கி, 50 தோட்டாக்கள் மற்றும் இரண்டு சஞ்சிகைகளை மீட்டுள்ளனர்.
அதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகம் மேற்கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


