சிட்னியின் பொண்டாய் கடற்கரையில் 15 பேருக்கு அஞ்சலி செலுத்திய மக்கள்
Shooting
Austria
By Fathima
சிட்னியின் பொண்டாய் கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட யூத எதிர்ப்புத் தாக்குதலில் கொல்லப்பட்ட 15 பேருக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில் திரண்டுள்ளனர்.
மௌன அஞ்சலி
அலைச்சறுக்கு வீரர்கள் கடலில் ஒரு பெரிய வட்டத்தை உருவாக்கி நேற்று அதிகாலை மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அத்துடன் இந்த தாக்குதலின் போது துப்பாக்கிதாரிகளில் ஒருவரை தடுத்து நிறுத்தி காயமடைந்த முஸ்லிம் வணிகர் அகமது அல் அகமதுவின் வீரத்தைப் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
இதனிடையே சிட்னி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒற்றுமையை வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் இரத்த தானம் செய்துள்ளனர்.