உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றச்சாட்டப்பட்ட இப்ராஹிமுக்கு விசாரணை ஒத்திவைப்பு
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை நடத்திய இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் பற்றிய தகவல்களை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மொஹமட் இப்ராஹிமுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதிக்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
இதன்படி, தெமட்டகொடை, மஹாவில பூங்காவைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் இவர் என்பதுடன், இந்த வழக்கில் இரண்டாவது சாட்சியாகப் பெயரிடப்பட்ட இவரின் வீட்டில் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய பெண் வெளிநாடு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
மற்றுமொரு சாட்சி வெளிநாடு செல்லும் அபாயம் உள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றில் தெரிவித்தார்.
இந்நிலையில், குறித்த சாட்சிக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்ட நீதியரசர், குறித்த நபரின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பான அறிக்கைகளை குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திடம் இருந்து வரவழைத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |