இந்திய நிறுவனத்துடன் இலங்கை போக்குவரத்து அமைச்சு செய்துள்ள உடன்படிக்கை
இலங்கையின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, இந்தியாவின் IRCON இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துடன் உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டது.
மஹவ முதல் அனுராதபுரம் வரையிலான 66 கிலோமீட்டர் தூரம் பாதைக்கு சமிக்ஞை விளக்கு அமைப்பை வடிவமைத்தல், நிறுவுதல், சோதனை செய்தல் என்ற அடிப்படையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கையெழுத்தான உடன்படிக்கை
14.9 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த ஒப்பந்தம் இலங்கையின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன, மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.
இதன்போது கருத்துரைத்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கை மக்களின் போக்குவரத்தை இலகுவாக்கும் வகையில், இந்தியா தொடருந்து வேலைத்திட்டங்களில் தமது ஆதரவை வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.