ஹர்ஷ டி சில்வாவுக்கு சவால் விடுத்த பொது பாதுகாப்பு அமைச்சர்

Tiran Alles Sri Lanka Harsha de Silva
By Harrish Jul 19, 2024 09:30 AM GMT
Harrish

Harrish

இலங்கை அரசாங்கம், VFS குளோபல் நிறுவனத்துடன் கைச்சாத்திட்டுள்ள, மூன்றாம் தரப்பு (அவுட்சோர்சிங்) விசா செயல்முறை ஒப்பந்தத்தை, கணக்காய்வுக்கு உட்படுத்த வேண்டும் என பரிந்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) சவால் விடுத்துள்ளார்.

முன்னதாக, இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த, ஹர்ஷ டி சில்வா தலைமையிலான பொது நிதி தொடர்பான குழு , இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு அல்லது அதன் திருத்தத்தை பரிந்துரைத்திருந்தது.

எவ்வாறாயினும், COPF குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் அனுமதியின்றி அறிக்கை தொகுக்கப்பட்டுள்ளது.

VFS உடன்படிக்கை

அத்துடன், இலங்கை அரசாங்கம் VFS உடன்படிக்கையில் ஒரு ரூபாவைக்கூட செலவழிக்கவில்லை என்றும் நட்டம் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

VFS  ஒப்பந்தம் தொடர்பான சில கதைகள் மற்றும் புள்ளிவிபரங்கள் அரசியல் மற்றும் தனிப்பட்ட நலனுக்காக சிலரால் புனையப்பட்டவை.

ஹர்ஷ டி சில்வாவுக்கு சவால் விடுத்த பொது பாதுகாப்பு அமைச்சர் | Tran Alas Challenged Harsha De Silva

எனவே, VFS ஒப்பந்தத்தில் அரசுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் பாரிய மோசடி நடந்துள்ளதாக கூறுபவர்களுக்கு, தாம் சவாலை விடுப்பதாகவும், யாராவது உண்மையான புள்ளிவிபரங்களுடன் வந்தால், அதற்கு தாம் பொறுப்பு என்றும் அமைச்சர் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW