ஈரானின் அனுமதியே தேவையில்லை! ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் - ட்ரம்ப் உறுதி!

By Vinoja Apr 12, 2026 08:54 AM GMT
Vinoja

Vinoja

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது.

ஈரானின் ஒத்துழைப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும், மிக விரைவில் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.

ஈரானின் அனுமதியே தேவையில்லை! ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் - ட்ரம்ப் உறுதி! | Trait Of Hormuz Will Reopen Soon Trump Warning

மேலும் , எண்ணெய்க் கப்பல்களைத் தடுப்பது மற்றும் சுங்கக் கட்டணம் வசூலிப்பது "மிகவும் மோசமானது"என குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச வர்த்தகத்திற்கு இந்த நீரிணை முக்கியமானது என்பதால் அது திறக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ட்ரம்ப் உறுதியாகவுள்ளார்.

ஈரானின் அணுஆயுதத்திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே அமைதி உடன்படிக்கையின் 99 சதவீத நோக்கம் என்றும், அது நிறைவேறினால் நீரிணை தானாகவே திறக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இரண்டு வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து இன்னுமே ஸ்தம்பித்துபோயுள்ளது.

போர் ஆரம்பிப்பதற்கு முன்னர் நாளொன்றுக்கு சுமார் 135 கப்பல்கள் பயணித்த நிலையில், 2 வார போர் நிறுத்தத்திற்குப் பின்னர் வெறும் 22 கப்பல்கள் மட்டுமே இந்த நீரிணையைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேங்கியுள்ள கப்பல்கள் எண்ணெய் டாங்கர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட கப்பல்கள் வளைகுடாப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.