இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பயிற்சித் திட்டம் !

Sri Lanka Sri Lankan Peoples Maldives Sri Lanka Fisherman
By Rakshana MA Jan 25, 2025 02:29 PM GMT
Rakshana MA

Rakshana MA

மீன்வளத்தில் கூட்டு முயற்சிகளை ஊக்குவிப்பது மற்றும் மாலைதீவில் பரவலாகப் பின்பற்றப்படும் ஒரு நிலையான மீன்பிடி நுட்பமான pole and line மீன்பிடி முறைகள் குறித்து இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், மாலைதீவு உயர் ஸ்தானிகர் மசூத் இமாத்தை சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில் துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதித்த போது மேலுள்ள விடயம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் இது தொடர்பில் உயர் ஸ்தானிகர் மசூத் இமாட் தெரிவிக்கையில்,

இந்தத் திட்டம் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பயனளிப்பது மட்டுமல்லாமல், மாலைதீவில் கடற்றொழிலாளர்களுகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் உதவும்.

மகிந்த தரப்பின் கோடிக்கணக்கான டொலர்கள்! அநுரவின் நடவடிக்கை என்ன

மகிந்த தரப்பின் கோடிக்கணக்கான டொலர்கள்! அநுரவின் நடவடிக்கை என்ன

பயிற்சித்திட்டம் 

மேலும், தற்போது மாலைதீவில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் 17,000 இலங்கையர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பும் பாராட்டத்தக்கது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளைப் பிரதிபலிப்பாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பயிற்சித் திட்டம் ! | Training Program For Sri Lankan Fishermens

அத்துடன், மாலைதீவு கடற்பரப்பின் வழியாக பயணித்த கடற்றொழிலில் ஈடுபடாத இரண்டு இலங்கை மீனவ படகுகள் சமீபத்தில் தடுத்து வைக்கப்பட்டமை குறித்து அமைச்சர் சந்திரசேகர் உயர் ஸ்தானிகரின் அவதானத்திற்கு கெண்டுவந்தார்.

இதுபோன்ற சம்பவங்களை புரிந்துணர்வுடன் மறுபரிசீலனை செய்யுமாறும் மாலைதீவு அதிகாரிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயிக்க கோரிக்கை முன்வைத்துள்ள விவசாயிகள்

நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயிக்க கோரிக்கை முன்வைத்துள்ள விவசாயிகள்

நடவடிக்கைகள் 

மீன்பிடித்தல் அல்லது பிற அங்கீகரிக்கப்படாத நடவடிக்கைகளோடு சம்பந்தப்பட்டவர்கள் குறித்து மேற்கொள்ளும் எந்தவெரு நடவடிக்கைகளிலும் ஆட்சேபனையில்லையெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பயிற்சித் திட்டம் ! | Training Program For Sri Lankan Fishermens

மேலும், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் பி.கே. கோலிதா கமல் ஜினதாசவும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதுடன் வலுவான இருதரப்பு உறவுகளை வளர்க்கும் அதே வேளையில், கடற்றொழில் துறையின் நிலையான வளர்ச்சிக்கு இலங்கை மற்றும் மாலைதீவுகள் இணைந்து பணியாற்றுவதற்கான பரஸ்பர உறுதிப்பாட்டை இந்தக் கலந்துரையாடல் மீண்டும் உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

தொலைபேசி பாவனையாளர்களுக்கு வெளியான தகவல் - கடுமையாகும் சட்டம்

தொலைபேசி பாவனையாளர்களுக்கு வெளியான தகவல் - கடுமையாகும் சட்டம்

இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்றைய நாணய மாற்று விகிதம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW