பல தொடருந்து சேவைகள் இரத்து

Sri Lanka Strike Sri Lanka Train Strike
By Mayuri Jul 10, 2024 03:33 AM GMT
Mayuri

Mayuri

பதவி உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து தொடருந்து நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் நேற்று (09) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து நேற்றிரவு 7 அஞ்சல் தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டன.

இதன் காரணமாக பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

பல தொடருந்து சேவைகள் இரத்து | Train Strike In Sri Lanka

அதேநேரம் இன்று காலை வேளையில் சில அலுவலகத் தொடருந்து சேவைகள் இடம்பெறும் எனத் தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் தொடருந்து பருவகால சீட்டைப் பயன்படுத்தும் பயணிகள் அதனைப் பயன்படுத்தி அரச பேருந்துகளில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை

இதேவேளை, போக்குவரத்து சேவை அத்தியாவசியச் சேவையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது சட்டவிரோதமானது எனப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொடருந்து நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல தொடருந்து சேவைகள் இரத்து | Train Strike In Sri Lanka

அதேநேரம் இன்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து சேவைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW