கிழக்கிற்கான தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம்

Batticaloa Colombo Trincomalee Government Of Sri Lanka
By Fathima Dec 24, 2025 02:09 PM GMT
Fathima

Fathima

மட்டக்களப்பிலிருந்து, திருமலை, கொழும்பு தொடருந்து சேவைகள் மீண்டும் இன்று (24.12.2025) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் துரித முயற்சியினால் றீ பில்ட் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஒரு கட்டமாக சேதமடைந்த தொடருந்து பாதை திருத்த பணி நிறைவடைந்ததன் பின்பு கடந்த சில நாட்களாக பரீட்சார்த்த சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

தொடருந்து சேவை ஆரம்பம்

இதனையடுத்து இன்று அதிகாலை 5 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கான உதயதேவி சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கிற்கான தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம் | Train Services To The East Resume

அத்துடன் திருகோணமலையிலிருந்து கொழும்பிற்கான சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து செல்லும் பயணிகள் கல்ஓயா சந்தியில் இறங்கி திருமலையில் இருந்து வரும் கொழும்புக்கான தொடருந்தில் மாற வேண்டும்.

இதேவேளை மாகோவில் இருந்து மட்டக்களப்புக்கான சரக்கு மற்றும் எரிபொருள் சேவைகளும் இன்று முதல் மீண்டும் முன்னெடுக்கப்பட உள்ளதாக தொடருந்து திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.