தொடருந்து ஆசன முன்பதிவினை மேற்கொள்வோருக்கு முக்கிய அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples
By Mayuri Mar 15, 2024 01:34 AM GMT

இலங்கையில் இன்று முதல் முழுவதுமாக இணையம் மூலமே தொடருந்து ஆசன முன்பதிவினை மேற்கொள்ள முடியுமென தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று இரவு 7 மணி முதல் தொடருந்து ஆசனங்களை இணைய வழியாக முன்பதிவு செய்ய முடியும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை 40 சதவீத ஆசன முன்பதிவே இணையம் மூலம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் முழுவதுமாக இணையம் மூலம் மட்டுமே ஆசனங்களை முன்பதிவு செய்ய முடியும்.

தொடருந்து திணைக்களத்தின் அறிவிப்பு

அத்துடன் இன்று முதல் ஆசன முன்பதிவு சீட்டின் புகைப்படம் இருந்தால் போதும் என தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தொடருந்து ஆசன முன்பதிவினை மேற்கொள்வோருக்கு முக்கிய அறிவிப்பு | Train Seat Booking In Sri Lanka

இது தவிர அரச ஊழியர்களுக்கான இலவச அனுமதிப்பத்திரத்தையும் இணையம் மூலம் முன்பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்காக கட்டணம் வசூலிப்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை என்றும், அவ்வாறு பணம் வசூலிக்கப்படும் என்ற வதந்தி பொய்யானது என்றும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.