தொடருந்தில் இருந்து தனியே பிரிந்து சென்ற இயந்திரம்!

Colombo Galle
By Fathima Apr 09, 2023 10:29 PM GMT

காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்த சமுத்திராதேவி தொடருந்தின் இயந்திரம் தனியே பிரிந்து சென்றுள்ளது. 

இச்சம்பவம் இன்று (09) காலை இடம்பெற்றுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தொடருந்தில் இருந்து தனியே பிரிந்து சென்ற இயந்திரம்! | Train Engine Traveled From Galle To Marudhan

இது தொடர்பான சிசிடிவி காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

தொடருந்தின் இயந்திரம் தனியே பிரிந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.

சுமார் 15 நிமிடங்களின் பின்னர் தொடருந்து மீண்டும் சரி செய்யப்பட்டு மருதானை நோக்கி இயக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.