மட்டக்களப்பு தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம்புரண்ட தொடருந்து

Batticaloa Sri Lanka Train Crowd
By Kumar Mar 26, 2025 12:55 PM GMT
Kumar

Kumar

மட்டக்களப்பிற்கு வந்த தொடருந்து மட்டக்களப்பு தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டதன் காரணமாக தொடருந்து சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 1 மணியளவில் மட்டக்களப்பு பிரதான தொடருந்து நிலையத்திற்கு வருகை தந்த தொடருந்தே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

மட்டக்களப்பு தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம்புரண்ட தொடருந்து | Train Derailed Near Batticaloa Railway Station

இதன்காரணமாக மட்டக்களப்பு பிரதான தொடருந்து நிலையத்திற்கான பயணங்கள் தடம்புரண்ட இடத்திற்கு அருகில் வரை நடைபெறும் என மட்டக்களப்பு தொடருந்து நிலைய பொறுப்பதிகாரி பேரின்பராஜா தெரிவித்தார்.

பாதிப்பில்லை

நாளைய தினம் சேவையினை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மட்டக்களப்பு தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம்புரண்ட தொடருந்து | Train Derailed Near Batticaloa Railway Station

புகையிரதம் தடம்புரண்டதன் காரணமாக அதில் வருகைதந்த பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியபோதும் எந்தவித பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.