கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் கைது

Bandaranaike International Airport Sri Lanka Crime
By Laksi Mar 01, 2025 06:37 AM GMT
Laksi

Laksi

நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட இலத்திரனியல் சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று  (01) கட்டுநாயக்க விமான பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, ஜா - எல பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய வர்த்தகரே கைது செய்யப்பட்டுள்ளார்.

எரிபொருள் நெருக்கடி: பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

எரிபொருள் நெருக்கடி: பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சந்தேக நபரான வர்த்தகர் துபாயிலிருந்து இன்றைய தினம் நள்ளிரவு 12.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் கைது | Trader Arrested With Electronic Cigarettes

இதன்போது, விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதியிலிருந்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான 100 இலத்திரனியல் சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW