இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் வெளியான தகவல்
இலங்கைக்கு இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை மாதம் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 10 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 25.2 சதவீதம் ஆகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை
அதன்படி, ஜூலை மாதம் முதல் வாரத்தில் 43,083 பேரும், இரண்டாம் வாராத்தில் 42,343 பேரும், மூன்றாவது வாரத்தின் முதல் நான்கு நாட்களில் 23,967 பேரும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, ஜூலை 18 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 27,574 இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை பிரித்தானியா, சீனா, ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |