இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Sri Lanka Tourism Tourist Visa
By Fathima Dec 27, 2025 01:34 PM GMT
Fathima

Fathima

இலங்கைக்கு இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 2,320,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 21ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 2,258,202 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகள் 

இவ்வாறு வருகை தந்தவர்களில் அதிகமானோர் இந்தியப் பிரஜைகளாக இருப்பதுடன் இரண்டாம் இடத்தில் பிரித்தானியாவும், மூன்றாவது இடத்தில் ஜேர்மனியும் உள்ளன.

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! | Tourist Arrivals To Sri Lanka

அந்தவகையில், இந்தியாவில் இருந்து 510,133 பேரும், பிரித்தானியாவில் இருந்து 204,703 பேரும்,ஜேர்மனியில் இருந்து 141,941 பேரும் மற்றும் சீனாவில் இருந்து 129,403 பேரும் வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, டிசம்பர் மாதத்தின் முதல் 21 நாட்களில் மட்டும் 154,609 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.