இலங்கையின் மொத்த சனத்தொகை குறித்து வெளியான தகவல்
Sri Lanka
Sri Lankan Peoples
By Faarika Faizal
இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷ
குறித்த விடயத்தை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை மதிப்பீட்டுக்கமைய இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளது.
இலங்கை சனத்தொகை
இதனடிப்படையில், இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதமாகவும்,பெண்களின் எண்ணிக்கை 51.7 வீதமாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, இலங்கையில் சனத்தொகை கூடிய மாவட்டமாக கம்பஹா மாவட்டம் பதிவாகியுள்ளது.
மேலும், இலங்கையில் தங்கி வாழ்வோரின் வீதம், அதாவது 65 வயதுக்கு மேற்பட்ட ,தொழில் புரியாதோர் 12.6 வீதமாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |