கொட்டி தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

Sri Lanka Department of Meteorology Climate Change Weather
By Laksi Dec 30, 2024 01:51 AM GMT
Laksi

Laksi

நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (30) முதல் அடுத்த சில நாட்களில் மழை வீழ்ச்சியில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (30.12.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.

தேங்காய் எண்ணெய் மோசடி! அதிகரித்துள்ள முறைப்பாடுகள்

தேங்காய் எண்ணெய் மோசடி! அதிகரித்துள்ள முறைப்பாடுகள்

பலத்த மழை

சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கொட்டி தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை | Today Weather Report Sl Tamil Meteorology

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். 

கல்முனை ஸ்ரீ சுபத்ராராம மகா விகாரையின் அன்னதான மண்டப திறப்பு விழா

கல்முனை ஸ்ரீ சுபத்ராராம மகா விகாரையின் அன்னதான மண்டப திறப்பு விழா

தேவையான நடவடிக்கை

நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-35 கிலோ மீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

கொட்டி தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை | Today Weather Report Sl Tamil Meteorology

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழையுடன் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மின் கட்டணம் குறைப்பு தொடர்பில் மின்சார சபை வெளியிட்ட தகவல்

மின் கட்டணம் குறைப்பு தொடர்பில் மின்சார சபை வெளியிட்ட தகவல்

உப்பு இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

உப்பு இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW