மின் கட்டணம் குறைப்பு தொடர்பில் மின்சார சபை வெளியிட்ட தகவல்
மின்சார சபையினால் வழங்கப்பட்ட கட்டண திருத்தங்கள் உள்ளிட்ட மின் நுகர்வோர் முன்மொழிவுகள் ஜனவரி 17ஆம் திகதி பகிரங்கப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மக்கள் கருத்துக் கணிப்புகளை பரிசீலித்து அவற்றை மீளாய்வு செய்த பின்னர் உரிய அறிக்கை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.
ஆலோசனைக்கூட்டம்
மேலும், கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மத்திய மாகாண மின்சார பாவனையாளர்கள் உட்பட பங்குதாரர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அத்துடன் ஜனவரி 2025 முதல் மின்சார வாரியத்தால் திருத்தப்படவுள்ள மின் கட்டணத் திருத்தங்கள் குறித்து வாடிக்கையாளர்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளைச் சேகரிக்க பொதுப் பயன்பாட்டு ஆணையம் செயல்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |