இன்றைய வானிலை: கடல் பிராந்தியங்களில் மழை

Sri Lanka Climate Change Weather Rain
By Faarika Faizal Nov 07, 2025 03:43 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். 

பாடசாலை விடுமுறை நாட்கள் குறித்த புதிய அறிவிப்பு

பாடசாலை விடுமுறை நாட்கள் குறித்த புதிய அறிவிப்பு

கடல் பிராந்தியங்களில் மழை  

இந்நிலையில், பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இன்றைய வானிலை: கடல் பிராந்தியங்களில் மழை | Today Weather Report

இத்துடன், நாட்டை சூழ உள்ள  கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோமீட்டர் வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து அல்லது வடமேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

போதைப்பொருள் தடுப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பலர் கைது

போதைப்பொருள் தடுப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பலர் கைது

கடல் பிராந்தியங்கள்  கொந்தளிப்பாகக் காணப்படும்

இவ்வாறு நீர்கொழும்பு தொடக்கம்  காலி, மாத்தறை  ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 55 கிலோமீட்டரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்  கொந்தளிப்பாகக் காணப்படும்.

இன்றைய வானிலை: கடல் பிராந்தியங்களில் மழை | Today Weather Report

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

மேலும், காலி தொடக்கம் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.0 - 2.5 மீட்டர் உயரத்திற்கு மேலெளக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

165 ஆண்டுகளில் முதல் முறையாக பெண்களுக்கு கதவுகளைத் திறக்கிறது இலங்கை தொடருந்து திணைக்களம்

165 ஆண்டுகளில் முதல் முறையாக பெண்களுக்கு கதவுகளைத் திறக்கிறது இலங்கை தொடருந்து திணைக்களம்

நிறைய இழக்க நேரிடும் என மம்தானிக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

நிறைய இழக்க நேரிடும் என மம்தானிக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

 

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW