இன்றைய வானிலை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka Climate Change Weather Rain
By Faarika Faizal Oct 29, 2025 04:03 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

மத்திய, சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், மத்திய, சப்ரகமுவ, மேல், தென், வடமத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 50 - 60 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

இந்நிலையில், பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பாதுகாப்பற்ற சிறுவர் சிறுமியர் தொடர்பில் நாடு முழுதும் விசேட செயற்திட்டம்

பாதுகாப்பற்ற சிறுவர் சிறுமியர் தொடர்பில் நாடு முழுதும் விசேட செயற்திட்டம்

எச்சரிக்கை

அத்துடன், வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியின் மத்தியில் நிலைகொண்டிருந்த மிகப் பலம் வாய்ந்த "மொன்தா" சூறாவளியானது நேற்று இரவு 11.30 மணியளவில் ஆந்திரப் பிரதேசத்திற்கும், ஜனத்திற்கும் இடையான கரைப் பிரதேசத்தை ஊடறுத்து தரைப் பிரதேசத்தை அடைந்துள்ளது.

இன்றைய வானிலை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Today Weather Report

இலங்கையின் வட பகுதியின் ஆழமான கடல் பிராந்தியங்களுக்கு அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்கு மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு ஊடாக களுத்துறை வரையான கடல் பிராந்தியங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

தெற்காசிய தடகளத்தில் இரண்டாம் இடம் பெற்ற இலங்கை அணிக்கு உற்சாக வரவேற்பு

தெற்காசிய தடகளத்தில் இரண்டாம் இடம் பெற்ற இலங்கை அணிக்கு உற்சாக வரவேற்பு

கடல் கொந்தளிப்பு 

மேலும், கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

இன்றைய வானிலை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Today Weather Report 

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாக் காணப்படும்.

அத்துடன், சிலாபம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 55 - 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாக அல்லது கொந்தளிப்பான நிலையில் காணப்படும். 


You May Like This Video...


முஸ்லிம் தாதியர்களின் ஆடை குறித்த அமைச்சரின் கூற்று : வெளியான ஆட்சேபம்

முஸ்லிம் தாதியர்களின் ஆடை குறித்த அமைச்சரின் கூற்று : வெளியான ஆட்சேபம்

பாடசாலை நேர மாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சின் உறுதிமொழி

பாடசாலை நேர மாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சின் உறுதிமொழி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW