பாதுகாப்பற்ற சிறுவர் சிறுமியர் தொடர்பில் நாடு முழுதும் விசேட செயற்திட்டம்
'சரோஜா' என்ற தொனிப்பொருளில் பாதுகாப்பற்ற சிறுவர் சிறுமியர் தொடர்பில் முச்சக்கர வண்டி மற்றும் அரச தனியார் பேருந்துகளுக்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு இன்று நாடு பூராகவும் நடைபெற்றது.
இதற்கமைய அம்பாறை மாவட்டத்தின் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறுவர் பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் கல்முனை பிரதான பேரூந்து தரிப்பிடத்தில் ஆரம்பமானது.
அத்துடன், அங்கு காணப்பட்ட முச்சக்கரவண்டி அரச தனியார் பேரூந்துகளில் உரிமையாளர்களின் ஒத்துழைப்புடன் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
கல்முனை, சாய்ந்தமருது மற்றும் காரைதீவில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு
இதன்போது கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி கலந்து கொண்டிருந்தார். அவருடன் ஏனைய பொலிஸ் அதிகாரிகள் கல்முனை பிரதேச செயலகம் கல்முனை உப பிரதேச செயலகம் சார்ந்த சிறுவர் பெண்கள் தொடர்பான அமைச்சு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் இணைந்திருந்தனர்.

இது தவிர சாய்ந்தமருது மற்றும் காரைதீவு பொலிஸ் நிலைய ஏற்பாட்டிலும் குறித்த ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.சம்சுதீன் பங்கேற்பில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.இதன்போது பொலிஸ் நிலையத்தின் முன்பாக முச்சக்கரவண்டிகள் வரவழைக்கப்பட்டு குறித்த ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டன.
பாதுகாப்பற்ற சிறுவர், சிறுமியர் குறித்த விழிப்புணர்வு
அத்துடன், காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு சந்தியல் குறித்த ஸ்டிக்கர் ஒட்டும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.இதன் போது காரைதீவு பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் நிர்வாக பிரிவு பொறுப்பதிகாரியுமான பி.எம்.எஸ்.டி குமார தலைமையில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

"சரோஜா ஸ்ரிக்கர்" என்பது பாதுகாப்பற்ற சிறுவர், சிறுமியர் குறித்த விழிப்புணர்வுக்காக ஒட்டப்பட்ட ஸ்ரிக்கர்களைக் குறிக்கின்றது.
மேலும் அண்மையில் கூட அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதிக்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனரத், உள்ளிட்டோர் குறித்த சரோஜா ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வினை ஆரம்பித்து வைத்திருந்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர, அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல, அம்பாறை மாவட்ட பதில் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் குமார் ,கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.எம் இப்னு அன்சாரும் கலந்து கொண்டிருந்தனர்.
You May Like This Video...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |