பாடசாலை நேர மாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சின் உறுதிமொழி

By Dharu Oct 28, 2025 07:58 AM GMT
Dharu

Dharu

பாடசாலை நேர சீர்திருத்தம் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்படும் எதிர்ப்புக்கள் தொடர்பில் கல்வி அமைச்சு பதில் வழங்கியுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 2026ஆம் ஆண்டு தொடக்கம்  பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு உறுதியளித்துள்ளது.

தற்போது பிற்பகல் 1.30 மணி வரை இருக்கும் பாடசாலை நேரம், இந்த சீர்திருத்தத்தின் கீழ் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை (30 நிமிடங்கள் அதிகரிப்பு) நீட்டிக்கப்படவுள்ளது.

கல்வியமைச்சின் உறுதி

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் கல்வியமைச்சின் குறித்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் அமைச்சு அதன் உறுதிப்பாடைடை வழங்கியுள்ளது.

இந்த கல்விச் சீர்திருத்தங்களை தேசிய கல்வி நிறுவகம் மட்டுமே வடிவமைப்பதாகவும், தாங்கள் இதில் நிபுணர்கள் அல்ல என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவேவ தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வி நிறுவகம் முதலில் ஒரு பாட நேரத்தை ஒரு மணிநேரமாக நீட்டிக்க முன்மொழிந்த நிலையில், நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, ஒரு பாட நேரம் 50 நிமிடங்களாக குறைக்கப்பட்டது.

இதன் காரணமாகவே பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.