வடக்கு - கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கடுமையான பாதிப்படைந்துள்ளனர்.
இந்த நிலையில் , நாளை (26) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தினுடைய கரையோரப் பகுதிகள் பலவற்றில் வேகமான காற்று வீசக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருவதுடன் அவதானமாக செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
எனவே, தற்போதைய வானிலை தொடர்பில் வெளிவரும் அறிவிப்புக்களை மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் அவதானத்துடன் செயற்படுமாறு யாழ்.பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் தலைவர், சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
மேலும், வடக்கு - கிழக்கில் மோசமடையும் இயற்கை சீற்றம் தொடர்பிலும் அவர் மக்களை கடுமையாக எச்சரித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |