அம்பாறையில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Ampara Climate Change Eastern Province Weather
By Laksi Nov 25, 2024 11:43 AM GMT
Laksi

Laksi

அம்பாறை (Ampara ) மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, அக்கறைப்பற்று, ஆலையடிவேம்பு, பொத்துவில், நிந்தவூர், இறக்காமம், கல்முனை,சம்மாந்துறை மற்றும் பல பிரதேசங்களிலும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

தாழ்நில பகுதிகளில் உள்ள வீதிகள் நீரில் முழ்கிக் காணப்படுவதால் மக்கள் பிரயாணம் செய்வதில் பல கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து முன்னாள் எம்.பி ஹரீஸ் இடைநிறுத்தம்

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து முன்னாள் எம்.பி ஹரீஸ் இடைநிறுத்தம்

கடும் மழை 

நாட்டில் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதனால், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல இராணுவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

அம்பாறையில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு | People Affected Due To Heavy Rain In Amparai

அதிக பருவத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் மழை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் சில நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

இன்று ஆரம்பமாகியுள்ள உயர்தரப்பரீட்சை

இன்று ஆரம்பமாகியுள்ள உயர்தரப்பரீட்சை

எச்சரிக்கை

வானிலை மாற்றத்தால் கடற்றொழிலாளர்கள் குறிப்பிட்ட தினங்கள் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறையில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு | People Affected Due To Heavy Rain In Amparai

கழிவு நிர் வாய்க்கால்களை நேரத்துடன் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் விவசாயிகளும் கவனம் செலுத்தி புனரமைக்கப்படாமையால் விதைக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு அழிவு ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பல கிராம புறங்களில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் உட்புகுந்தும் சூழ்ந்தும் காணப்படுவதால் பலர் பாதுகாப்பாக தங்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கி வாழும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கிடைக்கவுள்ள 200 மில்லியன் டொலர் கடனுதவி

இலங்கைக்கு கிடைக்கவுள்ள 200 மில்லியன் டொலர் கடனுதவி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW