இன்று ஆரம்பமாகியுள்ள உயர்தரப்பரீட்சை
2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது இன்று (25) ஆரம்பமாகியுள்ளது.
இதன்படி, இன்று முதல் டிசம்பர் 20ம் திகதி வரை 22 நாட்களுக்கு பரீட்சை நடைபெறவுள்ளது.
மேலும் இம்முறை மூன்று இலட்சத்து 33,185 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
உயர்தரப்பரீட்சை
அவர்களில் 253,390 பாடசாலை பரீட்சார்த்திகளும் 79,793 தனியார் பரீட்சார்த்திகளும் அடங்குவதாகப் பரீட்சைகள் திணைக்களத்தின் உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜீவராணி புனிதா கூறியுள்ளார்.
இந்நிலையில், பரீட்சார்த்திகள் 30 நிமிடங்களுக்கு முன்னதாக பரீட்சை மண்டபத்திற்குப் பிரவேசிக்குமாறு அவர் கோரியுள்ளார்.
பரீட்சைகள் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், பரீட்சைக்கு செல்லும் முன் செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் பரீட்சை நிலையங்களுக்கு செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன்னர் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சார்த்தியின் கையொப்பத்தை தகுதியான ஒருவரால் சரிபார்க்க வேண்டியது அவசியமானது எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |