நாட்டின் பல இடங்களில் ஏற்படப்போகும் வானிலை மாற்றம்

Sri Lanka Sri Lankan Peoples Climate Change Weather
By Rakshana MA Feb 20, 2025 03:11 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டின் பல இடங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எதிர்வு கூறியுள்ளது.

இன்றையை நாளுக்கான (20) வானிலை குறித்து திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

இதற்கமைய காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

விரைவில் நடைமுறைக்கு வரும் டிஜிட்டல் அடையாள அட்டை! வெளியான தகவல்

விரைவில் நடைமுறைக்கு வரும் டிஜிட்டல் அடையாள அட்டை! வெளியான தகவல்

வானிலை மாற்றம் 

அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பல இடங்களில் ஏற்படப்போகும் வானிலை மாற்றம் | Today Sri Lanka Weather Update

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

வாழைச்சேனையில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம்

வாழைச்சேனையில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம்

அதிகரித்துள்ள டொலர் பெறுமதி! மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதம்

அதிகரித்துள்ள டொலர் பெறுமதி! மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW