உப்பு விலை மாற்றம் தொடர்பில் வெளியான தகவல்

Consumers Welfare Association Sri Lanka Sri Lankan Peoples
By Rakshana MA Mar 02, 2025 11:36 AM GMT
Rakshana MA

Rakshana MA

கடந்த 25ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைமை அலுவலகத்தில் நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் உப்பு உற்பத்தி நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

தொழில்துறை மற்றும் உணவுப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் உயர்தர உப்பை நியாயமான விலையில் சந்தையில் வெளியிடுவதற்குத் தேவையான தலையீடுகளைச் செய்வதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கமாகும்.

காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் : ஒப்புதல் வழங்கிய இஸ்ரேல்

காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் : ஒப்புதல் வழங்கிய இஸ்ரேல்

உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் உப்பு

சந்தையில் விற்கப்படும் உப்பின் விலைகள், கடந்த காலத்தில் பல்வேறு விலைகளில் உப்பு விற்பனை, பருவகால உப்பு பற்றாக்குறை மற்றும் தொழில்துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அதிகாரசபை நடத்திய விலை கணக்கெடுப்புகளின்படி விவாதிக்கப்பட்டது.

உப்பு விலை மாற்றம் தொடர்பில் வெளியான தகவல் | Today Salt Price In Sri Lanka

அரசாங்கம் மற்றும் முன்னணி உப்பு உற்பத்தியாளர்கள் உட்பட பதினெட்டு நிறுவனங்களுடன் நடத்தப்பட்ட இந்தக் கலந்துரையாடலில், தற்போதைய சந்தை சூழ்நிலையால் நுகர்வோர் சிரமப்படாமல் இருக்க விலைகளைப் பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

எதிர்காலத்தில் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் உப்பு சந்தைக்கு வரவிருப்பதால், மார்ச் மாத இறுதிக்குள் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த விலையில் விற்கப்படும் என்று உற்பத்தியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டனர்.

மேலும், அதுவரை விலை உயர்வு இல்லாமல் விலை நிலையாக இருக்க வேண்டும் என்ற அதிகாரசபையின் கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டனர்.  

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ரமழான் நாள் 01 : அல்லாஹ்வின் அருளை நாடுங்கள்

ரமழான் நாள் 01 : அல்லாஹ்வின் அருளை நாடுங்கள்

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW